Sunday, July 26, 2009

நீண்ட கால இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. இந்த பதிவு தமிழில் கற்கும் மாணவர்களுக்கு பயன் உள்ளதாகவும்,சிந்தனை திறனை வளர்க்கவும் உதவ வேண்டும் என்ற ஆசையில் எழுதுகிறேன்.

முதல் கட்டமாக மிக எளிமையான கணக்குகள் மற்றும் மாறுபட்ட சிந்தனையை தூண்டும் கேள்விகளை பதில்களுடன் அளித்து உள்ளேன்.தொடர்ந்து இது போன்ற இடுகைகளை ஏற்படுத்த எண்ணிஉள்ளேன்.

முதலில் கேள்விகளையும், இறுதில் பதில்களையும் கொடுத்து உள்ளேன்.

1. எண் ஒன்றை மட்டும் பயன்படித்தி இரு எண்களை எழுத வேண்டும். அந்த இரண்டையும் கூட்டினாலும் பெருக்கினாலும் ஒரே மதிப்பு வர வேண்டும்.
2. விடுபட்ட எண்ணை கண்டுபிடிக்கவும்.
6 3 4 6
5 5 7 4
8 3 4 8
3 9 7 ?
3. பின்வரும் குறிகளை பயன்படித்தி கூடுதல் 29 வருமாறு செய்யவும்.
+, -, X,/,(,),1,2,3,4,5,6,7,8,9

4. முருகன் குடும்பத்தில் அம்மா,அப்பா, ஏழு சகோதரிகள்.ஏழு சகோதரிகளுக்கும் ஒரு சகோதரன் எனில் அந்த குடும்பத்தில் மொத்தம் எத்தனை பேர்?
5. 5 பூனைகள் 5 எலிகளை கொல்ல 5 நிமிடங்கள்
என்றால் நூறு பூனைகள் நூறு எலிகளை கொல்ல எவ்வளவு நேரம் ஆகும்?
6. சில மாதங்களுக்கு 30 நாட்கள் ,மற்றும் சிலவற்றுக்கு 31 நாட்கள் எனில் எத்தனை மாதங்கள் 28 நாட்களை கொண்டு உள்ளது?

7. நீங்கள் மூன்று ஆப்பிள்ளில் இருந்து இரண்டு ஆப்பிள்களை எடுத்தால், உங்களிடம் எத்தனை இர்ருக்கும்?
8 மருத்துவர் உங்களை ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு மாத்திரை சாப்பிட சொன்னால் மூன்று மாத்திரை சாப்பிட எவ்வளவு நேரம் ஆகும்?



பதில்கள் :
1. 11, 1.1
11 X 1.1=12.1
11+1.1=12.1
2. 6 3 4 6 = 19
5 5 7 4 = 21
8 3 4 8 = 23
3 9 7 6 = 25
3. 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 - 8 + 9 = 29
4. 10
5. 5
6.12. எல்லா மாதங்களும் குறைந்தது 28 நாட்களை கொண்டு இருக்கும்.
7. 2
8.1 மணி நேரம் ( 8=1, 8.30=2, 9=3)